அரூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியின் போது கலவை லாரி கவிழ்ந்து மேஸ்திரி பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

அரூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியின் போது கலவை லாரி கவிழ்ந்து மேஸ்திரி பலி.


அரூரில் புதியதாக  பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில்  கட்டுமான பணியில் கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி ஊராட்சி நஞ்சன்கொட்டாய்  கிராமத்தை சேர்ந்த பூபதி(37) என்பவர் வேலை செய்து வந்தார் அப்போது கலவை எந்திரத்தை பின்னோக்கி நகர்த்திய போது அவ்வாகனம் கீழே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பூபதியின் மீது சாய்ந்ததில் பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார் 


இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் பூபதியின் உடல்  பிரேத பரிசோதனைக்காக  அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad