தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அருகே உள்ள முத்தனூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு உணவு வழங்கும் விழா மற்றும் வன்னியர் புராணம் நாடகம் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் நடைப்பெற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கெளரவ தலைவருமான ஜி.கே.மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் பாமக மேற்கு மாவட்ட செயலாளரும் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி. செந்தில் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக