தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்  பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.


கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும்  கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பாலக்கோடு  ஸ்தூபிமைதானம் முதல் கல்கூடஅள்ளி வரை  கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், 11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலக்கோடு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மராமத்து பணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதாரஆய்வாளர்ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad