பாலக்கோடு அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் தொடக்க விழா நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

பாலக்கோடு அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் தொடக்க விழா நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் புதிய  அங்கன்வாடி மைய திறப்பு விழா பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


தீர்த்தகிரி நகர், இரயில்வேகேட், தக்காளிமண்டி, உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் நீண்ட தூரம் சென்று பஸ் நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தனர். குழந்தைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அண்னாநகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்க கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். 


பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்களின் தீவிர முயற்சியால் தமிழக அரசு அண்ணாநகர் பகுதிக்கு புதிய அங்கன்வாடி மையம் ஒதுக்கீடு செய்தது. அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில்  இன்று பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் புதிய அங்கன்வாடி மையத்தினை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில்  பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், ஒன்றியகுழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் மாது கவுன்சிலர்கள் சிவசங்கரி ரவி, ஜெயந்திமோகன், சரவணன், சாதிக், திமுக கிளை செயலாளர்கள் மோகன், காமராஜ், சரவணன், முருகேசன், பெரியசாமி, ராஜீ, வேலு, கணேசன், சக்திவேல், சம்பத், பாண்டியன் விஜயன் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad