பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் ஆட்கடத்தல் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் ஆட்கடத்தல் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் உலக மனித ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு முகாம் பாலக்கோடு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கே.கோபிநாத் அவர்களின் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம்  இன்று நடைப்பெற்றது.


இதில் சட்டவிரோதமாக குழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை கடத்தி உடற் உறுப்புக்களை திருடுதல், குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துதல், பெண்குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு அடிமை படுத்துததல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதற்கு உறுதுனையாக  இரயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியபாரிகள், இரயில் நிலைய வியபாரிகள் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் ஆட்கடத்தல் குறித்து யார் மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 139 என்ற இலவச தொலைபேசி அழைப்பிற்க்கு தகவல் தர கேட்டுக் கொள்ளப்பட்டது.


நாம் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டால் ஆட்கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என எடுத்துக் கூறப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் வட்ட சட்ட பணிகள் குழு ஆலோசகர் சின்னசாமி, இரயில்வே காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியபாரிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad