

மலை கிராமங்களையும், கிராமப்பகுதிகளையும் அதிகம் கொண்ட பகுதியாக பாப்பாரப்பட்டி இருந்து வருகிறது, பல்வேறு தேவைகளுக்காக தினசரி ஆயிரக்கணக்கானோர் இப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் சிரமப்பட்டு வந்தனர், இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பத்து லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி உடனடியாக புதிய பயணியர் நிழற் கூட்டத்தை கட்டி முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருப்பது கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பிருந்தா முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி நன்றி உரை வழங்கினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி தலைவர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக