இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் (TACTV), தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, மற்றும்கிராமப்புற தொழில்முனைவோர் (VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.

மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்ததிட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். தருமபுரி மாவட்டத்தில், "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இத்திட்டத்தினை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், இணையவழியில் விண்ணப்பித்திடவும் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும். விண்ணப்பங்கள் 15.03.2023 அன்று காலை 11.30 முதல் 14.04.2023 அன்று இரவு 20.00 வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பதாரர்குறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக