மல்லசமுத்திரம் கிராமத்தில் பாமக சார்பில் அமாவசை இரவு கூட்டம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மார்ச், 2023

மல்லசமுத்திரம் கிராமத்தில் பாமக சார்பில் அமாவசை இரவு கூட்டம் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாமக  கிழக்கு ஒன்றியம் சார்பில் வேளாவள்ளி ஊராட்சி மல்லசமுத்திரம் கிராமத்தில் அமாவாசை இரவு கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேடி முன்னிலை வகித்தார்.


இக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளில் தொண்டர்கள் மும்முரமாக பணியாற்ற வேண்டும், வீடு வீடாக சென்று மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


18 வயது நிரம்பியவர்களை வாக்களர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். உழைக்கும் பட்டாளி மக்களின் நலனுக்காக பாமக செயல்பட்டு வருகிறது, தமிழக மக்களின் நலனை சார்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும் உள்ளிட்டவைகள் குறித்துபேசப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ராஜவேல், கிருஷ்ணன், வெங்கடாசலம், சிவகுமார், சபரி, ராஜேந்திரன், இளைஞர் சங்க நவீன், மாதையன் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad