தருமபுரி லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்திற்கு ஸ்வெட்டர் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

தருமபுரி லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்திற்கு ஸ்வெட்டர் வழங்கப்பட்டது.


தருமபுரி குண்டலபட்டியில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் உள்ள சகோதரர்களுக்கு குளிர்காலம் என்பதால் ஸ்வெட்டர் வேண்டும் என மை தருமபுரி அமைப்பினரிடம் கேட்டிருந்தனர். குளிர்காலம் என்பதால் அங்குள்ள ஐம்பது நபர்களுக்கு ஸ்வெட்டர் தேவைப்படுகிறது என நாம் கேட்டிருந்தோம். தகவல் அறிந்ததும் காரிமங்கலம் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் திரு.இல.கிருஷ்ணன் அவர்கள் ஸ்வெட்டர் வழங்கினார். 


இனி மாதமாதம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். இந்த நிகழ்வில் திரு.கார்த்திகேயன், மை தருமபுரி சதீஸ் குமார், முஹம்மத் ஜாபர் ஆகியோர் ஸ்வெட்டர் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad