இண்டூர் - குப்புசெட்டிபட்டியில் 31 அடி விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய சாமி திருக்கோயிலில் ஹனுமான் ஜெயந்தி விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

இண்டூர் - குப்புசெட்டிபட்டியில் 31 அடி விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய சாமி திருக்கோயிலில் ஹனுமான் ஜெயந்தி விழா.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் குப்புசெட்டிபட்டியில் 31 அடி விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய சாமி திருக்கோயிலில் ஹனுமான் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.  அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  கடந்த 17ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் அனைவரும் கங்கணம் கட்டி விழாவை தொடங்கினர். 

அனுமன் ஜெயந்தியான இன்று காலை 6 மணிக்கு குப்பு செட்டிப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலமாக விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு கொண்டுவரப்பட்டது. காலை 9 மணிக்கு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா அலங்காரம் மற்றும் திவ்ய பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக தரிசனத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. 


அனுமன் ஜெயந்தி விழாவில் நிர்வாக அறங்காவலர் சி இடும்பன் சாமிகள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இ.மணி, இ.சக்திவேல் மற்றும்  ஊர் கவுண்டர் ஜெ அருள், மந்திரி கவுண்டர் ஏ கந்தசாமி, கோல்காரர் கணேசன், சிவகுரு மற்றும் குப்பு செட்டிபட்டி அனைத்து ஊர் பொதுமக்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயரை  வழிபட்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad