2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் (PMFBY) மூலம் நெல்-II பயிர்க் காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றோர் மற்றும் கடன் பெறாதோர்) பயிர்க் காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஏதுவாக 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்களிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்படும் பொதுச் சேவை மையங்கள் செயல்படும்.

மேலும், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் காப்பீடு பிரிமியத்தொகை பெற்றுக்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக