ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், விரட்ட முடியாமல் தினறும் வனத்துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 நவம்பர், 2022

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், விரட்ட முடியாமல் தினறும் வனத்துறையினர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சுற்றி பிக்கனஅள்ளி திருமல்வாடி மொரப்பூர், ஆகிய  காப்புக்காடுகளில் அடர்ந்த வனப்பகுதிகள் நிரம்பி உள்ளன.

இந்த வனப் பகுதிகளில் இருந்து  உணவு மற்றும் தண்ணீர் தேடி  காட்டு யானைகள்  அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன் எதிரே உள்ள மனிதர்களை மிதித்து கொன்று வருகிறது.


கடந்த 2 வருடத்தில் 5 க்கும் மேற்பட்டோர் யானை மிதித்து இறந்துள்ளனர். அதே போன்று கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு மின்வேலியில் சிக்கி யானை இறந்துள்ளது. அதே போன்று வழி தவறி கிணற்றில் வீழ்வதும் தொடர் கதையாகி உள்ளது.


காட்டு யானைகளால்  இப்பகுதி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட 3 யானைகள் ஒரு குட்டி யானை என மொத்தம்  4 காட்டு யானைகள், உணவு தேடி கிராமத்திற்க்குள் கூட்டமாக நுழைந்து    நெல், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும்,மிதித்தும்  சேதப்படுத்தியது.


யானையின் பிளிறல்  சத்தம் கேட்டு கிராம மக்கள் கூச்சலிட்டும், பட்டாசு வெடித்து துரத்தினர் ஆனால் யானை அப்பகுதியை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்ததால் அப்பகுதி மக்கள்  பாலக்கோடு வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் அப்பகுயில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை அருகில் உள்ள காப்புக் காட்டிற்க்கு விரட்டியடித்தனர்.


இது குறித்து  அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்  கடந்த ஒரு மாதமாக  காட்டு யானைகள் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக கிராமங்களில்  புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருவதாகவும், காட்டு யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் யானை ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad