ஆவின் பாலகம் அமைக்க மானியத்துடன் கடன் திட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

ஆவின் பாலகம் அமைக்க மானியத்துடன் கடன் திட்டம்.


50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45.00 இலட்சம் மானியம் வழங்குதல். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அரசாணை (நிலை) எண்:95 நாள்:21.10.2022-இல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. 


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.3 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 


இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3 சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad