டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே செல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது. 46) இவருக்கு திருமணமாகி சரிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.


சரிதா பென்னாகரம் அருகே ஏரியூர் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார், இவரது கனவர் வெங்கடசாமி விவசாயம் செய்து கொண்டு சொந்தமாக டிராக்டர் வைத்து உழவு தொழில் செய்து வந்தார், இந்நிலையில் நேற்று போடரஅள்ளி அருகே உள்ள வாழைத்தோட்ட பள்ளம் என்ற கிராமத்தில் தொட்லான் என்பவரின் விவசாய நிலத்தில் உழவு ஓட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக  டிராக்டர் கவிழ்ந்ததில் அடியில் சிக்கி வெங்கடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad