Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தின விழா.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நேரு யுவ கேந்திரா சங்கதன் நிறுவிய நாள் மற்றும் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் ஆகியன மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம் பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமையில்  நடைபெற்றது.

போளையம்பள்ளி ஊராட்சி தலைவர் கலைமணி மாயக்கண்ணன்,துணை தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுரை,பேச்சு, ஓவியப்போட்டி கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் வழங்கினார்.மேலும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சார்பாக திரு.செங்கண்ணன், மாறப்பநாய்க்கன்பட்டி இளைஞர் மன்ற தலைவர் ஆகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 


முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார். ‌நிகழ்ச்சியில் 200க்கும் மேலான பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போளையம்பள்ளி, மாறப்பநாயக்கன்பட்டி இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies