இலவச பல் பரிசோதனை முகாம் மோதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 மார்ச், 2022

இலவச பல் பரிசோதனை முகாம் மோதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகம் முதுகலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் நான்காம் நாள் நிகழ்வாக தர்மபுரி டாக்டர் செளந்தர் பல்  மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சௌந்தர் மற்றும் குழுவினருடன் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் மோதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது இதில் கிராம மக்கள் மற்றும் மோதுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ  மாணவிகள் என ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலவசமாக பல் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் தேவைப்படுவோருக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.  

தொடர்ந்து டாக்டர் சௌந்தர் அவர்கள் பற்கள் பராமரிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார் முன்னதாக மருத்துவ முகாமுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் மாணவன் அசோக்குமார் வரவேற்றார். 

இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் சமீர் நன்றி உரையாற்றினார் விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சி. கோவிந்தராஜ் மற்றும் செஞ்சுருள் சங்கம் திட்ட அலுவலர் முனைவர் காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.