நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய அறிவியல் தினம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 பிப்ரவரி, 2022

நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய அறிவியல் தினம்.

தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக லலிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை  பெரியார் பல்கலைக் கழகத்தை சார்ந்த இயற்பியல் துறை தலைவர் திரு டாக்டர் பிரசாத் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு சீனிவாசன், நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் மேற்பார்வையாளர் திரு. வேல்முருகன், கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு கிருஷ்ணமூர்த்தி, அரசு மருத்துவக்கல்லூரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் திரு லோகநாதன், பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு இளங்கோவன், ஆசிரியர் விக்ரம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

இக்கண்காட்சியில் சிறப்பாக அறிவியல் படைப்புகளை தந்த மாணவர்களுக்கு  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். இறுதியாக நேரு யுவகேந்திராவை சார்ந்த திரு ஹரி பிரசாத்  நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad