தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தர்மபுரி மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தீன்தயாள் உபாத்யாயா கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் வேலை வாய்ப்பு முகாம் . தர்மபுரி அரூர் பாலக்கோடு 3 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் திட்ட இயக்குனர் பாபு முகாமை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் கணேசன், ராஜேஷ், அங்குசரமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சென்னை, ஒசூர், சேலம், திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து 7 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக