கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு அச்சடிக்கும் கும்பல் பிடிபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் .
பின்னர் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டவர்களை சுற்றிவலைத்த போலீசார் 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ 6 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக