உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (17.08.2021) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டுமெனவும், தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம், பான் மசாலா, குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மேலும் உணவு வணிகர் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும், மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், உணவு பாதுகாப்புத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உணவு வணிகர்களுக்கும், உணவு பொருள் கையாள்பவர்களுக்கும் வழங்கப்படும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி சான்றிதழ்களும், மாவட்ட உணவு பாதுகாப்புத்தறையின் சார்பில் சுகாதாரமாகவும், தரமாகவும் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு சுகாதார மதிப்பீடு சான்றும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. ஜெயக்குமார், மாவட்ட நியமன அலுவலர் மரு.ஏ.பானுசுஜாதா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரு.அசோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி . சிவகாந்தி, பேராசிரியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad