Type Here to Get Search Results !

அதியமான்கோட்டை வீரகாரன் திருக்கோவில் 26 ஆம் ஆண்டு திருவிழா; முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தொடக்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த வீர காரன் திருக்கோவில் 26 ஆம் ஆண்டு திருவிழா முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவர்கள் கொடியேற்றி வைத்து இதற்கு முன்பு வீர காரன் சுவாமிக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் மஞ்சள் குங்குமம் சந்தனம் தேன் விபூதி பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வீரக்காரன் படையல் இட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவ பிரகாசம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் தங்கராஜ், நகர அவைத்தலைவர் அம்மா வடிவேல், நகர மன்ற உறுப்பினர் சத்யா கார்த்திக், வீரா, பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல இணைச் செயலாளர் பிரசாத், சுபாஷ், அங்குராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் வருகை தந்த பக்தர்களுக்கு ஐந்தாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, பல்வேறு பகுதியிலிருந்து 12 கிராம மக்கள் வீரகாரன் கோவிலில் தரிசனம் செய்தனர், விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் வீரக்காரன் கோவில் தலைவர் பழனி அவர்கள் செய்திருந்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies