ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுத் தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான முனைவர் கோவி.செழியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, காவிரியாற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் இடங்கள், சமையற் கூடம் அமைந்துள்ள பகுதிகள், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை மனுக்கள் குழுவினர் இன்று (09.11.22) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒகேனக்கல் காவிரியாற்றில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் வரத்து இருத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் நடந்து அருவிக்கு செல்ல முடியும். எனவே, வினாடிக்கு 35 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் வரத்து இருந்தாலும் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை மீது சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் நடைபாதையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், இதே போன்று வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருத்தாலும் பாதுகாப்பாக பரிசல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஒகேனக்கலில் உள்ள சமையற் கூடங்கள் நவீனப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்குழுவினர் தெரிவித்தனர். பென்னாகரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் நேரில் கேட்டறிந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் தலைவர் முனைவர் கோவி செழியன் திருவிடைமருதூர், (தொகுதி) உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி (வால்பாறை தொகுதி), கிரி (செங்கம் தொகுதி) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி), சந்திரன் (திருத்தணி தொகுதி), செந்தில்குமார் (வாணியம்பாடி தொகுதி), பிரபாகராஜா (விரும்பாக்கம் தொகுதி), மதியழகன்( பர்கூர் தொகுதி ), மாங்குடி (காரைக்குடி தொகுதி) இக்குழுவினருடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக