Type Here to Get Search Results !

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் 69 வது அனைத்து கூட்டுறவு சங்கத்தினருக்கும் பாராட்டு விழா.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் ஒன்றிணைந்து 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை  மாவட்ட அளவிலான அதிகாரிகள், நிர்வாகக் குழுவினர். துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு விழா  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்  பணியாளர்களின் கஷ்டத்தையும் அவர்கள் படும் இன்னல்களையும் எடுத்துரைக்கும் வரும் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சிறப்பாக செயல்பட்ட மண்டல இணைப்பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், பால்வள பொதுமேலாளர் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள். சார்பதிவாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் போன்ற உயர் அதிகாரிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், நிர்வாகக் குழுவினர்கள், செயலாளர்கள், அலுவலர்கள்,  கூட்டுறவு சங்க ஊழியர்கள்.  நியாய விலைக் கடை பணியாளர்கள், அலுவகப் பணியாளர்கள் போன்ற அனைவருக்கும்  நினைவுச் சின்னமும்  சான்றிதழும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி வழங்கினர்


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர்   மாவட்ட பால்வள தலைவர் டி ஆர்.அன்பழகன், பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவித ராமகிருஷ்ணன் மற்றும் பல கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies