மக்கள் நீதி மய்யம் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் டிஎன்ஸி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 25ம் நாள் வெற்றி விழா கொண்டாட்டம்.
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள டி.என்.ஸி திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்பட வெளியிடப்பட்டு நேற்றுடன் 25 நாள் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் திரு. G. M. அரூர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் அரூர் டிஎன்சி திரையரங்கில் கேக் வேட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து டிஎன்சி திரையரங்கு நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன.. இதில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் திரு.ரவி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் திரு. அரவிந்த், கடத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்த், அரூர் ஒன்றிய நற்பணி செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக