மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறகுகள் முளைத்தால் சிகரம் தொடலாம் இணைய வழிச் சிறப்புத் தன்னம்பிக்கை கருத்தரங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறகுகள் முளைத்தால் சிகரம் தொடலாம் இணைய வழிச் சிறப்புத் தன்னம்பிக்கை கருத்தரங்கம்.


தருமபுரி மருதம் நெல்லி கல்விக் குழுமம், நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து சிறகுகள் முளைத்தால் சிகரம் தொடலாம் என்ற பொருண்மையில்  மாநில அளவிலான இணைய வழிச் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம.இராஜகணபதி  வரவேற்றார்.

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர்  டாக்டர்.க.கோவிந்த் நிகழ்விற்கு தலைமை வகித்தார், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி.காமராஜ் முன்னிலையுரை வழங்கினார்.

திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை  உதவிப் பேராசிரியர் இரா.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.உமாமகேஸ்வரி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் நிகழ்வில் பேசுகையில்" மாணவர்களுக்கு ஊக்கமும் மனதில் உறுதியும் இருந்தால்  நிச்சயம் வெற்றி பெறலாம்.மேலும் தடைகளைத் தாண்டி சிகரம் தொடுவதற்கு ஏற்ற வழிமுறைகளையும் மாணவர்கள் பெற வேண்டும்" என்று சிறப்பு விருந்தினர் கூறினார்.

நிகழ்வின் நிறைவாக கல்லூரியின் தமிழ்த் துறை முதலாம் ஆண்டு மாணவர் செ.துரைராஜ் நன்றி கூறினார். கல்லூரியின் தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவர் வே.விசாக் நிகழ்வை தொகுத்து வழங்கினார், நிகழ்வை ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு‌.கோகிலா ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில் பல்வேறு பள்ளி, கல்லூரி  ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் தமிழ் ஆர்வலர்கள், வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள் போன்றோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad