மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் ஐந்தாம் கட்டமாக நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி மையங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இராயக்கோட்டைஊராட்சி ஒன்றியம், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் சோக்காடி ஆகிய பகுதிகளில் நடைப்பெற்ற ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார் ,உடன் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) வி.கோவிந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக