ஞாயிற்று கிழமை அன்று மதுபானக் கடைகள் மூடப்படும்; ஆட்சியர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஞாயிற்று கிழமை அன்று மதுபானக் கடைகள் மூடப்படும்; ஆட்சியர் அறிவிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.082021 (ஞாயிற்று கிழமை) அன்று மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப, அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003- 12-வது விதியின் படி 15.08.2021 (ஞாயிற்று கிழமை) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்க அரசு உத்திரவிட்டுள்ளது.

அதற்கிணங்க, எதிர் வரும் 15.08.2021 (ஞாயிற்று கிழமை) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (TASMAC) (ஏற்கனவே கொரோனாநோய் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL1, FL2,FL3, FL3A, FL3AA, FL11)) அனைத்தும் 15.08.2021 அன்றைய தினத்தில் மூடப்படும் என்றும், இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad