மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்.

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை மாற்றுத்திறனாளிகள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் நுகர்வோர் மற்றும் பொது வினியோகத் துறை 2020NFSA ACT 2013  சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் ஏற்று அந்தியோத அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழக அரசும் NPHH மற்றும் PHH ரேஷன் கார்டுகளை மாற்றி AAY குடும்ப காடுகளாக மாற்றி மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கவேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 

இந்த வணக்கம் வட்ட வழங்கல் அலுவலரிடம் கொடுத்து பின்பு அதன் மீது கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து ரேஷன் கார்டுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது இதில் 450 பேர் கலந்து கொண்டனர் மற்றும் 372 மனு  மாவட்ட செயலாளர் K.G கரூரான் முன்னிலையில்  வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad