அரூரில் திமுக அரசின் 100 நாள் கொண்டாட்டம் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிய கட்சியினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

அரூரில் திமுக அரசின் 100 நாள் கொண்டாட்டம் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிய கட்சியினர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று100 வது நாளை  அரூரில்  இனிப்பு, வெஜிடபிள் உணவு பொட்டலம் வழங்கி, துண்டு பிரசுரம் வினியோகம் செய்து கொண்டாடிய திமுகவினர் பங்கேற்காமல் ஒதுங்கிய திமுகவினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானா அண்ணா சிலை முன்பு  தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாள் கொண்டாட்டத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி  கலந்துகொண்டு வணிகர்கள், பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மேலும் திமுக அரசின் 100 நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். பின்னர் முருகர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெஜிடபிள் உணவு பொட்டலங்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், ஐடி பிரிவு தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திமுகவினர் பெரும்பாலானோர் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினர். அரூர் பஸ் ஸ்டாண்டில் நகர செயலாளர் அனுமதியின்றி ஏற்பாடு செய்த திமுக சிறுபான்மை பிரிவு  கேக் வெட்ட நிகழ்ச்சியை புறக்கணித்து சென்ற மாவட்டம் பொறுப்பாளர். அண்மையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad