அரூர், மொரப்பூர்,பாப்பிரெட்டிப்பட்டி, கீரைபட்டி,ஈட்டியம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். இந்தப் பகுதியில் விளைச்சல் ஆகும் பப்பாளிப் பழங்களை, வெளி மாநில, மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பழங்களில் பப்பாளி எப்பொழுதுமே தனி மவுசு உண்டு. இந்த பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ,பீட்டா புரோட்டின் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, மற்றும் கண் பார்வைக்கு நல்லது. பீட்டா புரோட்டின் புற்றுநோய், இருதய நோய்களைத் தடுக்கும், மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்,நீர்ச்சத்து நிறைந்த இந்தப் பழத்தின் விலை குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கும் பழமாக பப்பாளி மாறியுள்ளது.
இந்த பப்பாளி பயிர் சாகுபடி செய்வதற்கு கால நிர்ணயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயிர் செய்யலாம். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் செடிகளை நடவு செய்யப்படுகிறது. செய்து நடவு செய்த ஆறு மாதத்தில் காய்கள் முளைக்க தொடங்கும், 8 மாதத்தில் விளையும் பப்பாளிப்பழங்களை பறிக்கலாம்.
ஒரு ஏக்கரில் பப்பாளி சாகுபடியில் வாரம் ஒருமுறை ஒரு டன் வரை பப்பாளிப்பழம் பறிக்கலாம். கடந்த ஆண்டு ஒரு டன் பப்பாளிப் பழம் ரூ. 7000 விற்பனையானது. தற்பொழுது டன்னுக்கு ரூ. 10 ஆயிரம் விற்பனையாகின்றது. இதனால் பப்பாளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.இந்த நிலையில் பப்பாளி செடியில் உள்ள இலைகளை வெள்ளை பூச்சி தாக்கத்தால் அதிகரிக்கத் தொடங்கியதால் பப்பாளி விளைச்சல் பாதிப்படைந்தது. பப்பாளிக்கு நல்ல விலை இருந்தும் நோய் தாக்குதலால் பப்பாளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வருத்தத்தில் விவசாயிகள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக