1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 இலட்சம் மதிப்பிலான உதவிகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 ஜூலை, 2021

1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 இலட்சம் மதிப்பிலான உதவிகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் 1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் 1300 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.97.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்விற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டிஎன்விஎஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களது நலனை பாதுகாக்கவும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 40 சதவீதம் பாதிப்பு இருந்தாலே அவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகளான கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதி உதவி, மான்யத்துடன் கூடிய வங்கி கடனுதவி மற்றும் வருவாய் துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியமரூ.1000/- போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பயனபடுத்தும் அனைத்து வகையான உபகரணங்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர இலவச பயண சலுகைகள் வழங்கப்படுகிறது.


சிறப்பு திட்டமாக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் துறையின் கீழ் செயல்படும் ALIMCO நிறுவனத்தின் ADIP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தருமபரி மாவட்டத்தில் 04.01.2021 முதல் 12.01.2021 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் பரிந்துறையின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 855 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 73,29, 840/- மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.


இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சுமார் 233 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.19,34,000/- மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பள்ளி (Samgra Shiksha) மூலம் கல்வி பயிலும் 445 மாற்றுத்திறன் மாணக்கர்களுக்கு 21,59,087/-மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.


கொரோனா நோய் தொற்று காரணமாகவும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைதவிர்க்கும் பொருட்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்க திட்டமிட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று காலத்தில் 20,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணத்தொகை ரூ. 1000/வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டதில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகிறது.


மாற்றுத்திறானாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 11.06.21 அன்று நடத்தப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கேற்ப வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடைபெறும்.இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் கொரானா தடுப்பூசி செலுத்துவதில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் மக்களை தேடி கொரானா தடுப்பூசியை மருத்துவர்கள் செலுத்தும் நிலை மாறி தற்போது மக்களே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விழிப்புணர்வு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.


மாற்றுத்திறனாளிகள் இந்த உபகரணங்களை பெற்று அவற்றை முறையாக பயன்படுத்தி தங்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை எளிதாகி கொள்ளவேண்டுமென்றும் தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.


இந்நிகழ்வில் அலிம்கோ நிறுவன முதுநிலை மேலாளர் திரு.அசோக்குமார், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் சுப்பிரமணி, ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் திருமதி மாது சண்முகம், திருமதி.சத்யா சேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிவண்ணன், திருமதி.ஷகிலா,ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.கலைச்செல்வன், திரு.ஆறுமுகம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சசிக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad