தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்தபோட்டியில் கொட்டாயூர் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர், இதில் 14 வயதிற்குட்பட்ட வலைப்பந்து போட்டியில் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
அதேபோல பாப்பாரப்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கோக்கோ போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டார் பிரிவில் மாணவ மற்றும் மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனர் இந்த வெற்றியின் மூலம் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு கொட்டாயூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தகுதி பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கே வி குமார், உதவி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் உள்ளிட்ட பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பதக்கங்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.