ஆய்வின் போது இரு கடைகளில் செயற்கை நிறமேற்றிய சில்லி சிக்கனும் பிறிதோர் கடையில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார். இரு கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிமம் புதுப்பிக்காத கடைகள் உடனடியாக விணணப்பிக்க அறிவுறுத்தினார்.

கடைகளில் தன் சுத்தம் சுற்றுப்புறம் சுத்தம் சுகாதாரம் பேணவும், இறைச்சி உள்ளிட்ட மூலப்பொருள்கள் தரமானதாகவும் உரிய விபரங்கள் அச்சடித்த பொருள்கள் வாங்கி உபயோகிக்கவும், சமையல் எண்ணெய் ஒரிரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும் தேவையற்ற செயற்கை நிறமேற்றி ரசாயன பவுடர்கள் தவிர்க்கவும், குடிநீர் பாதுகாப்பான நீராக இருக்கவும் விழிப்புணர்வு செய்தார். மேலும் ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை கலனில் சேகரித்து உணவு பாதுகாப்பு துறை அங்கீகாரம் பெற்ற டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக்கொள்ள வழி உள்ளதாகவும் விபரம் தெரிவித்தார். மேலும் பேருந்து நிலைய பகுதி ஒரு குளிர் பான கடை மறறும் தக்காளி மார்க்கெட் பகுதி பேக்கரி ஆய்வு செய்த போது காலாவதியான குளிர் பானங்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது மேலும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து தலா ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வுகள் அனைத்து ஒன்றியங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற உத்திரவிட்டுள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
