தலைமை நிலைய செயலாளர் பொற்கொடி வரவேற்க, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நிறுவன தலைவருமான மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரசேகர், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன், மாநில துணைத்தலைவர் மாயகிருஷ்ணன், மேனாள் சட்ட செயலாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக திமுக அரசு அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், டிஏ 4 சதவீதம் உடனடியாக வழங்க வேண்டும், தற்போது பறிக்கப்பட்டுள்ள அண்ணா வழங்கிய, ஊக்க ஊதியத்தை 2023 ஜனவரி பிறப்பதற்கு முன் தமிழக முதல்வர் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
