
வாரிய ஆணை எண் 2 ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கான விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்க வேண்டும். பிரிவு அலுவலகங்கள், உபகோட்டங்கள், நிர்வாக பிரிவுகள் உள்ளிட்டவைகளை மறு சீரமைப்பு என்ற பெயரால் தொழிற்சங்கங்களோடு கலந்து பேசாமல் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, 2023 ஜனவரி 10ல் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று சலுகைகளை மற்றும் உரிமையை காக்க வேண்டும் என விளக்க கூட்டத்தில் வலியுறுத்தினர்.
சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ம்நிலதுணைத்தலைவர் பி.ஜிவா தலைமை வகித்தார. மாவட்ட செயலாளர் தி.லெனின்மகேந்திரன், பொருளாளர் சீனிவாசன் தமிழ்நாடு மின்வாரிய எலக்ட்ரிசிட்டி எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளர் எஸ்.கோகுல்தாஸ்,தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் சி.முருகன், டாக்டர் அம்பேத்கர் எம்பிளாயீஸ் பெடரேஷன் திட்ட துணை செயலாளர் வினோத், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வ்கிகள் பங்கேற்று பேசினர்.
