தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளனர்.
இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது, குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும், தேடுதல் பணியில் தீவிரம் காட்டினர்.
சமீபத்தில் கடந்த 25 ஆம் தேதி பொம்மிடி அருகே உள்ள பி. துரிஞ்சிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் குடியிருக்கும் பூவிழி 24 என்பவர் தனது தாயார் உடல்நிலை சரியில்லாததால் சேலம் அவசரமாக சென்று விட்டார் இவர் வீட்டில் ஜன்னல் அருகில் வைத்திருந்த செல்போன் திருடு போயிருந்தது.
அதேபோல 25ஆம் தேதி பொம்மிடி அருகே உள்ள வேப்பாடி ஆறு மாரியம்மன் கோவில் பூசாரி உதயகுமார் வயது 47 இவரது வீட்டிலிருந்து பூட்டை உடைத்து 1300 ரூபாய் திருடு போயிருந்தது, 26 ஆம் தேதி இளங்கோவன் வயது 52 கோட்டைமேடு ராஜகணபதி நகர் பகுதி சார்ந்த அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர், இவரது வீட்டிலிருந்த காமாட்சி விளக்கு, பித்தளை தட்டு, சொம்பு, பணம் 3200 போன்றவற்றை இவர் வெளியூர் சென்றிருந்தபோது திருடியுள்ளனர்

மேலும் பில் பருத்தி கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் திருடவும் முயற்சி நடைபெற்றது, இந்த 5 திருட்டு சம்பவ வழக்குகளையும் பதிவு செய்த போலீசார் தங்களது தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர் இந்த திருட்டு கும்பலை பிடிக்க அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் நடத்தினர்.
அப்போது பொம்மிடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் மேற்கண்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் என தெரிய வந்தது.
அதன் பெயரில் அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் ஏற்காடு பகுதியை சார்ந்த 7பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்புடையதும் திருடியதும் தெரிய வந்தது, பெரியான் 37 வயது தந்தை பெயர் குப்புசாமி நல்லூர், கார்த்திக் வயது 21 தந்தை பெயர் அண்ணாமலை வெள்ளக்கடை, கோவிந்தராஜ் வயது 35 தந்தை பெயர் கல்லு வெள்ளை, நல்லூர், மணி வயது 20 தந்தை பெயர் சேத்து மணி மூளூர், சக்திவேல் வயது 26 தந்தை பெயர் இரு சின்னசாமி மேலூர் என ஐந்து பேரை போலீசார் ஏற்காடு சென்று வீட்டில் தூங்கும்போது கைது செய்தனர்.
விசாரணையில் இவர்களிடமிருந்து 7 பவுண்நகை, திருடு போன குத்து விளக்கு, சொம்பு, செல்போன் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது, இவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, ராடு ,ஸ்குரு, முகமூடி மற்றும் வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக இரு சக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து வந்து பொம்மிடி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், வயதானவர்கள் போன்றவர்களை பகல் நேரத்தில் கண்காணித்து அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் குடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து ஏற்காடு தப்பி சென்றுள்ளனர். இரண்டு மாத காலத்திற்குள் வளர்ந்து வந்த இந்த கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தது, பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.