இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்கிட வேண்டும், ஒப்பந்தம் புற ஆதார முகமை முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அரசாணை எண்கள் 115, 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், தமிழக அரசு துறைகளில் உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டமானது.

காலை 11 மணி அளவில் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கியது, அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர்.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர், மாநில துணை தலைவர் கோ.பழனியம்மாள், முன்னிலை வகித்தனர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேலாளர் விஜயா, கலைவாணி, மாதையன், சரவணன் குமார் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.மாலையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
