விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 31 12 2002 தேதிக்குள் ஈகேஒய்சி புதுப்பித்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு செய்தி கூறியுள்ளார்கள், மேலும் 2507 விவசாயிகளுடைய விவரங்கள் அரூர் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் உள்ளது.
மேலும் மேற்கண்ட 2507 பயனாளிகளுக்கும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்களும் விவசாயிகளுக்கு கைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டும் மற்றும் கிராமங்களில் முகாம்கள் நடத்துதல் மற்றும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இந்த தகவலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த விவரங்கள் மக்கள் கணினி மையங்களுக்கும் வேளாண்மை துறையின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது எனவே இந்த குறுகிய காலத்தில் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சரோஜா அவர்கள் விவசாயிகளுக்கு கூறியுள்ளார்.