
இதன் ஒரு பகுதியாக 16.11.22 அன்று தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள அரசு திருமுருக கிருபானந்த வாரியார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு பேரணியை தருமபுரி வட்டார வளமையும் மேற்பார்வையாளர் (பொ) திருமதி கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு முருகேசன் அவர்கள் தலைமையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணையானது மாரியம்மன் கோயில் தெரு தட்சிணாமூர்த்தி கோயில் தெரு, விநாயகர் கோவில் தெரு, பென்னாகரம் சாலை வழியாக வந்து பள்ளியில் முடிவடைந்தது.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் திருமதி. பரிதாபானு , சிறப்பாசிரியர்கள் ரகுபதி வனிதா ஆசிரியை ஸ்ரீதேவி மற்றும் இயன்முறை சிகிச்சை நிபுணர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை இனம் கண்டறிந்தல், அடிப்படைக் கல்வி அளித்தல் உரிய சலுகைகளை பெற்று தருதல் சமூகத்தோடு இணைந்து பங்கேற்கச் செய்தல் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள் மாணவர்களால் எழுப்பப்பட்டன.
முன்னதாக அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சேக் சுபாணி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தெரசாள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
