இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் கூறும் பொழுது விவசாயிகள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உழவன் செயலியை அனைத்து விவசாயிகளும் தங்களது கைபேசியின் மூலம் பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறை மானிய திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் பெறுவதற்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் நுண்ணீர் பாசனம் மற்றும் பருத்தியில் நுனிக்கிள்ளுதல் நெற்பயிரில் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள் .மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு பயிர் காப்பீடு விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தகடூர் களஞ்சியம் இயற்கை விவசாயி திரு தயாநிதி அவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். மேலும் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்கள்.
இறுதியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு திருப்பதி அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.