தருமபுரி மாவட்டம் அருர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா தர்மபுரி சார்பாக இன்று 03.11.2022 கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ. சக்தி குமார் மற்றும் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் காலநிலை மாற்றம் குறித்தும் மரம் செடி கொடிகளை வளர்த்தல் குறித்தும் பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அது மட்டுமின்றி நேரு யுவகேந்திராவின் தன்னார்வத் தொண்டராக பணிபுரிய என்ன தகுதிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டது. மேலும் இந்நிகழ்வினை கல்லூரியில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் கே கோபிநாத் மற்றும் நேரு மகேந்திரா மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ஞானவேல் அவர்கள் வழி நடத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.