
இந்தப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 58 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர், இந்தப் பள்ளிக்கு பழுதடைந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் சுற்று சுவர் இல்லாமல் இடிந்த நிலையில் சுவர் மட்டுமே உள்ளது.
இதனால் அருகில் உள்ள புதர் செடி கொடிகளில் இருந்து விஷ பூச்சிகளும் உள்ளே வந்து விடும் நிலையில் உள்ளது எனவே இந்த பள்ளிக்கு சுற்றுச்சூழல் வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி இல்லாமலும் காணப்படுகிறது.
அதே போல பள்ளியின் மேற்கூரைகள் ஓடுகளால் உள்ளதால் அவை உடைந்து அறைக்குள் மழை தண்ணீர் உள்ளே வந்துவிடுவதால் வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று விடுகின்றது. மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டிடத்தின் மேல் கான்கிரீட் கூரையில் இருந்து தண்ணீர் சொட்டாக கசிகின்றது.
எனவே பழுதடைந்த வேலைகளை சரி செய்து கொடுக்கவும், கழிப்பிட வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவும் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.