தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் பால் விலை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். பாஜக பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட, நகர,ஒன்றிய, கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மொரப்பூர் ஒன்றிய பொறுப்பாளர் (கிழக்கு) சரவணன் நன்றியுரை கூறினார்.