தருமபுரி மாவட்டம் சவுளுப்பட்டி கிராமத்தில் தருமபுரி மொரப்பூர் புதிய இரயில்வே பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து அப்பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் மற்றும் விலை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிந்த உடன் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு வழங்கினர். அதனை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
