இந்த கும்பாபிஷேகம் கடந்த 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் 12.5 மணிக்கு தீர்த்தங்கள் ஆலயத்திற்கு எடுத்து வந்து தீபார்தன ஆசீர்வாத பூஜைகளுடன் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி பூஜை, கணபதி 1008 பூஜை, புண்ணியானாம் கலசங்கள் ஸ்தாபனம், காலை 10 மணிக்கு கணபதி தாளம், பூர்ணாவதி ஆசிர்வாதம், மதியம் 2 மணிக்கு சிவலிங்கம், நந்திகேஸ்வரர் அமிர்தாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கரிக்கோலம், பம்பை மேள தாளத்துடன் திரு வீதி உலா நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு பிரதான கலசங்கள், பரிகார கலசங்கள், யாகசால பிரவேசம் அங்குரார்பணம், கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து 108 ஹோமம் யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை, ஈஸ்வரன் சகஸ்ரநாம1108 பூஜை, நவகிரக பூஜை, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் பரிவர்தன ராகங்கள் தம்பதி பூஜை, திராவிடகானம், 108 வில்வ ஹோமமும், இரவு 10 மணிக்கு எந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல், நா சந்தானம், கோபுர கலச பூஜைகள் நடைபெற்றது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீருத்ரம் சமகம், புருஷசுக்தம் ஸ்ரீ சக்தம், நாராயண சுக்தம் மற்றும் சுதர்சன ஹோமங்கள் ராகங்கள், வேதங்கள் பரிவர்தனைகளும், காலை 9. 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, தீர்த்தங்கள் அபிஷேகம், மூலவர் அபிஷேகம் அலங்கார சிறப்பு பூஜை, பசுமாடு தரிசனம் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து மேளதாண்டருடன் ஊர்வலம் நடைபெறும், 11 மணி அளவில் மண்டலாபிஷேகம் அலங்காரம் ஆசிர்வாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

