வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 201 விவசாயிகளுக்கு ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 201 விவசாயிகளுக்கு ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக மண் வளத்தினை மேம்படுத்திடவும், நீர் ஆதாரத்தினை உருவாக்கிடவும், வேளாண் உற்பத்தியினை பெருக்கிடவும், பல்வேறு வேளாண் திட்டங்கள், நவீன தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வேளாண்மை இயந்திரமயமாக்கல், நில மேம்பாட்டு திட்டம், சூரிய உலர்த்தி மானியத்தில் அமைத்தல், சூரிய மின்வேலி அமைத்தல், முதலமைச்சரின் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் மானியத்தில் அமைத்தல், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் பம்ப் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் இந்த ஓர் ஆண்டில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் சூரிய உலர்த்தி அமைத்தல் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.5.95 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.8.92 லட்சம் என மொத்தம் 3 சூரிய உலர்த்திகள் ரூ.14.87 லட்சம் மதிப்பீட்டிலும், சூரிய மின் வேலி அமைத்தல் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.4.02 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.6.03 லட்சம் என மொத்தம் 3 சூரிய மின் வேலிகள் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 50 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.67.46 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.67.60 லட்சம் என மொத்தம் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களும், வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையத்திற்கு மானியத் தொகையாக ரூ.9.64 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.15.36 லட்சம் என மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களும், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 11 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையக்குழுக்களுக்கு மானியத் தொகையாக ரூ.88.00 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.22.00 லட்சம் என மொத்தம் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் திட்டத்தின் கீழ் 11 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.6.18 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.9.27 லட்சம் என மொத்தம் ரூ.15.45 லட்சம் மதிப்பீட்டில் அறுவடைக்குப்பின் தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்களும், முதலமைச்சரின் சோலார் பம்ப் அமைக்கும் திட்டத்தின் கீழ் 11 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.22.70 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.9.70 லட்சம் என மொத்தம் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் சோலார் பம்ப்செட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் வரப்பு அமைத்தலுக்கு 82 விவசாயிகளுக்கு ரூ.2.00 லட்சம் மானியமும், மதிப்புக்கூட்டும் வேளாண் இயந்திர மையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 2 விவசாய குழுக்களுக்கு மானியத் தொகையாக ரூ.10.00 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.10.00 லட்சம் என மொத்தம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் பொருட்களை மதிப்புகூட்டும் பொருட்களாக தயாரிப்பதற்கான இயந்திரங்களும், பண்ணை குட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.1.00 லட்சம் மானியமும், மின்சார மோட்டார் பம்ப் செட் மானியத்தில் அமைக்கும் திட்டத்தின் கீழ் 26 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.2.60 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.7.80 லட்சம் என மொத்தம் ரூ.10.40 லட்சம் மதிப்பீட்டில் விவசாய மின்சார மோட்டார் பம்ப் செட்டுகளும் என மொத்தம் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மானிய நிதி உதவியுடன் கூடிய பல்வேறு திட்டங்களின் மூலம் 201 விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.2.19 கோடி மற்றும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.1.57 கோடி என மொத்தம் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.