"கல்லூரி கனவு" நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் வருகின்ற 02.07.2022 அன்று நடைபெறவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

"கல்லூரி கனவு" நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் வருகின்ற 02.07.2022 அன்று நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், மாணவியர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் வருகின்ற 02.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.06.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், மாணவியர்களின் உயர் கல்விக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 25.06.2022 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிவைத்தார்கள். இதனை தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், மாணவியர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் வருகின்ற 02.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் 1500 மாணவர்கள், மாணவியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையும், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. 

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து மாணவர்கள், மாணவியர்களின் துறை சார்ந்த உயர்கல்வி பயில்தல், வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. பல்வேறு துறைகளின் சிறந்த வல்லுநர்கள் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட உள்ளன.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், மாணவியர்கள் அனைவரும் இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உயர்கல்விக்கான வழிகாட்டு அறிவுரைகளை கேட்டு பயன்பெறுமாறும், பெற்றோர்கள் தங்களின் 12-ஆம் பயின்று தேர்ச்சி பெற்ற குழந்தைகளை கட்டாயம் இக்கல்லூரி கனவு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து இக்கருத்துரைகளையும், வழிகாட்டுதல்களையும் கேட்டு பயனடையச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வருகின்ற 02.07.2022 சனிக்கிழமை அன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், மாணவியர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கும், கடைக்கோடி கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியர்களும் இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கும், துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகம்கவசம் அணிதல், கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல், இம்மாணவர்கள், மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட துறை அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி ஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.