பென்னாகரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

பென்னாகரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், ஏரியூர் அரசு சமுதாய உடல்நல மையம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு- அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக மேற்கொண்டு, விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், ஏரியூர் அரசு சமுதாய உடல்நல மையம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (29.06.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் 2020-21-ன் கீழ் சுஞ்சல்நத்தம் ஊராட்சியில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் ஈச்சபாடி ஓடையில் புதிய தடுப்பு அணை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.7.75 இலட்சம் மதிப்பீட்டில் ஏரியூர் பழத்தோட்டத்தில் மரகன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.24.54 இலட்சம் செலவில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மற்றும் ரூ.407 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் பண்ணை அருகில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அரசு சமுதாய உடல்நல மையத்தில் ஆய்வு செய்து, இம்மையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்கள். பின்னர், அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக மேற்கொண்டு, விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும், மூங்கில் மடுவு நியாய விலைக்கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அந்நியாய விலைக்கடையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் தரம், ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பொதுவிநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தரமாகவும், எடை அளவு குறையாமலும், தாமதமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டுமென நியாய விலைக்கடை பணியாளருக்கு உத்தரவிட்டார்கள்.

இருப்பு உள்ளிட்டவற்றை இந்த ஆய்வின்போது தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.மீனா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சண்முகம், உதவி பொறியாளர் திரு.சீனிவாசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.