விவசாயிகள் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலத்தில் வைத்து அதிகபட்ச விலை பெற்று பயனடையலாம்.- மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

விவசாயிகள் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலத்தில் வைத்து அதிகபட்ச விலை பெற்று பயனடையலாம்.- மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களால் விளைவிக்கப்படும் பருத்தி விளைபொருளுக்கு தரகு, கமிஷன் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து, அரூர், ஊத்தங்கரை ரோட்டில் அமைந்துள்ள அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலத்தில் வைத்து அதிகபட்ச விலை பெற்று பயனடையலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் நாள்: 29.06.2022 இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி. தங்களால் விளைவிக்கப்படும் பருத்தி விளைபொருளுக்கு தரகு, கமிஷன் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர், ஊத்தங்கரை ரோட்டில் அமைந்துள்ள அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலத்தில் வைத்து அதிகபட்ச விலை பெற்று பயனடைய வேண்டப்படுகிறது.

மறைமுக ஏலம் பிரதி வாரம் தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் கொங்கனாபுரம், ஊத்தங்கரை, செங்கம் வியாபாரிகள் கலந்து கொள்வதோடு, பருத்தி அரவைமில் வியாபாரிகளும் கலந்துக்கொள்ள இருப்பதால், பருத்தி விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், தாங்கள் விளைவிக்கும் பருத்தியினை நிழலில்  நன்கு உலர்த்தியும், சருகு, தூசி இல்லாமல் வெண்மை நிறத்துடன் எடுத்துவந்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயன் பெறவும், விளைபொருளுக்கான தொகையினை தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பருத்தி விற்பனைக்கு கொண்டு வரும் போது தங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு நகல் எடுத்து வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், விபரங்களுக்கான தொடர்பு எண். 95785 56523 என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.