நிகழ்ச்சியினை பள்ளி தாளாளர் மூகாம்பிகை கே.கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பேசினார், இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும் சாலையில் பள்ளி மாணவ மாணவிகள் நடக்கும்போது வலதுபுறம் நடக்கவும் சாலையை கடக்கும் போது சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல்லுதல், பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிப்பது , 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது, மீறி இயக்கினால் அவருடைய பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். டூவீலர்களில் இருவர்தான் செல்ல வேண்டும், மூன்று நான்கு நபர்கள் பயணிப்பதால் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிடும். மேலும் பெரும்பாலான விபத்துக்கள் செல்போனில் பேசியப்படி வாகனத்தை ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும்., மாணவிகள் மொபட்டில் செல்லும் போது முறையாக பயிற்சி எடுத்து கொண்டு ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
தனியார் பள்ளியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஏப்ரல் 12, 2022
0
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைப்பெற்றது.
சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் நமக்கும் பொறுப்பு உண்டு என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.மேலும் வாகனத்தை இயக்கும் நபர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வேண்டும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கல்லுரி முதல்வர், ஆசிரியர்கள் ஒட்டுநர்கள், பாதுகாவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
.gif)



